பராமரிப்பு பணி காரணமாக 4 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது, என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மூர்மார்க்கெட்-ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (43001), சென்னை கடற்கரை- அரக்கோணம் இடையே இரவு 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (43801) இன்று மற்றும் நாளையும், அரக்கோணம்- சென்னை கடற்கரை இடையே அரக்கோணத்தில் இருந்து காலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (43802) இன்று ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணம்- வேளச்சேரி இடையே அரக்கோணத்தில் இருந்து காலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (43932), அரக்கோணம்- சென்னை கடற்கரை இடையே நாளை பாதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், ரயில் எண்கள் (43217), (43219), (66047), (43507), (43901), (43413), (43221), (43509), (43223), (43903) மற்றும் (43821) மின்சார ரயில்கள் பட்டாபிரம், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிற்காது. 

அதற்கு பதிலாக பட்டாபிராம், நெமிலிசேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும், திருவள்ளூர்- ஆவடி இடையே திருவள்ளூரில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (43832) இன்று மற்றும் 13ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை- திருவள்ளூர் இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (43705) ஆவடி- திருவள்ளூர் இடையே இன்று மற்றும் 13, 20ம் தேதி வரை பாதியாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.