குறள் : 659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை
மு.வ உரை :
பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும் நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்
கலைஞர் உரை :
பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.
சாலமன் பாப்பையா உரை :
பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.
Kural 659
Azhak Konta Ellaam Azhappom Izhappinum
Pirpayakkum Narpaa Lavai
Explanation :
All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first will afterwards yield fruit.
Horoscope Today: Astrological prediction for February 11, 2022
இன்றைய ராசிப்பலன் - 11.02.2022
இன்றைய பஞ்சாங்கம்
11-02-2022, தை 29, வெள்ளிக்கிழமை, தசமி திதி பகல் 01.52 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. நாள் முழுவதும் மிருகசீரிஷம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 11.02.2022 Today rasi palan - 11.02.2022
மேஷம்
இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். ஆரோக்கியத்துக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். சுப செய்திகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் குறையும்.
கடகம்
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும்.
சிம்மம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். உடல்நிலை சீராகும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு மாலை 5.05 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவதில் தடை தாமதங்கள் ஏற்படும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு மாலை 5.05 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். சுப முயற்சிகளை தள்ளி வைக்கவும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை.
தனுசு
இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.
மகரம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நற்பலனை தரும்.
மீனம்
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உற்றார் உறவினர்களால் மன சங்டங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை விலகி லாபம் கிட்டும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,