ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை சப்டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் 11 சப்இன்ஸ்பெக்டர்களை நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் செய்து எஸ்பி தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:
காவேரிப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் திமிரிக்கும், தக்கோலம் சீனிவாசன் சிப்காடுக்கும், ஆற்காடு தாலுகா அசோக்குமார் அரக்கோணம் தாலுகாவுக்கும், வாழைப்பந்தல் பார்த்திபன் நெமிலிக்கும், திமிரி சேகர் அவளூருக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
அரக்கோணம் தாலுகா சீனிவாசலு வாழைப்பந்தலுக்கும், திமிரி சேட்டு பாணாவரத்துக்கும், கொண்டபாளையம் ரவிச்சந்திரன் ஆற்காடு தாலுகாவுக்கும், கலவை சரவணமூர்த்தி கொண்டபாளையத்துக்கும், ஆற்காடு டவுன் சுரேஷ் குமார் காவேரிப்பாக்கத்துக்கும், சிப்காட் தேசன் அரக்கோணம் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் மாறுதல் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.