சிப்காட் பகுதியில் நேற்று ஊரடங்கு மீறி செயல் பட்ட 4 இறைச்சி கடைகளுக்கு போலீசார் தலா ₹5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பார்த்தசாரதி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜான் சேவியர், தாசன் மற்றும் போலீசார், பெல் பெரிய தாங்கல் சாலை அருகே நேற்று முழு ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு ஊரடங்கு விதியை மீறி இறைச்சி விற்பனை கடைகளை திறந்து வைத்திருந்ததாக, அதே பகுதியை சேர்ந்த சரவணன்(34), விநாய கம்(37), சிவானந்தன்(41), பாஸ்கர்(47) ஆகிய 4 பேருக்கு, தலா ₹5 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.