'புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதாலாம்' தேர்வுக்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது . அதன்படி புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் Take home முறையில் செமஸ்டர் தேர்வு நடைபெறும். தேர்வு எழுத 1 மணி நேரத்திற்கு பதில் 3 மணி நேரம் வழங்கப்படும். 
விடைத்தாளில் பதிவு எண், பெயர், பாட குறியீடு, பாட பெயர் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு பக்கத்திலும் மேலே குறிப்பிட வேண்டும்.

வினாத்தாள் கூகுள் க்ளாஸ்ரூம் அல்லது மின்னஞ்சல் வாயிலாக மாணவர்களுக்கு அனுப்பப்படும். அரியர் மாணவர்கள், தாங்கள் இறுதியாக பயின்ற கல்லூரிகளைத் தொடர்புகொண்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்