ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட்நியூஸ் ; இனி மானியவிலையில் சிலிண்டர் வாங்கலாம்!

சமையல் கியாஸ் சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது.

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட சலுகைகளும் அவ்வப்போது கிடைக்கின்றன. இந்நிலையில், சமையல் சிலிண்டர்களும் இனி ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. .

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ரேஷன் டீலர்கள் சிலிண்டர் விநியோகம் குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, விரைவில் 5 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர்கள் ரேஷன் கடைகள் மூலமாகப் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.  

இந்நிலையில் அதற்கான ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளது. எனவே இனிவரும் காலங்களில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களுடன் மானிய விலையில் சமையல் சிலிண்டர் கிடைக்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. சிலிண்டர் விலை என்ன என்பது இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.