கரிசலாங்கண்ணி துவையல்
தேவையான பொருள்கள் | அளவு |
---|---|
கரிசலாங்கண்ணிக் கீரை | ஒரு கட்டு (200 கிராம்) |
மிளகாய் வற்றல் | 8 |
எலுமிச்சை | 2 |
நெய் | 2 ஸ்பூன் |
உப்பு | தேவையான அளவு |
கீரையைச் சுத்தம் செய்து உலர வைத்து, வாணலியில் போட்டுச் சிறிது நெய்விட்டு வதக்கவும். மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளிப்போட்டு தனியே வறுத்து, அத்துடன் உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்து, கீரையுடன் சேர்த்து வதக்கி இறக்கவும். இதைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் ரத்த சோகை குணமாகும். தலைமுடி நீளமாக வளரும்.