குறள் : 647
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது
மு.வ உரை :
தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய் அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.
கலைஞர் உரை :
சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.
சாலமன் பாப்பையா உரை :
தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே.
Kural 647
Solalvallan Sorvilan Anjaan Avanai
Ikalvellal Yaarkkum Aridhu
Explanation :
It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech and is neither faulty nor timid.
Today rasi palan - 30.01.2022
இன்றைய ராசிப்பலன் - 30.01.2022
இன்றைய பஞ்சாங்கம்
30-01-2022, தை 17, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி மாலை 05.29 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. பூராடம் நட்சத்திரம் இரவு 12.22 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் இரவு 12.22 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. பிரதோஷம். மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
Horoscope Today: Astrological prediction for January 30, 2022
இன்றைய ராசிப்பலன் - 30.01.2022
மேஷம்
இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்க்கவும். தூர பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது.
மிதுனம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். நீண்ட நாள் தடைப்பட்டிருந்த வேலைகள் இன்று எளிதில் முடிவடையும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். செலவுகள் குறையும்.
சிம்மம்
இன்று- வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை ஓரளவு குறையும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது.
கன்னி
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் தாமதமாகவே செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
துலாம்
இன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
விருச்சிகம்
இன்று உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை சற்று குறையும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய செயல்களை தொடங்குவதில் அனுகூலம் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் புத்திர வழியில் சுப செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடையலாம்.
கும்பம்
இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.
மீனம்
இன்று பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். உங்களின் அறிவுத் திறமையால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய வாய்ப்புகள் உருவாகும். உற்றார் உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத உதவி கிட்டும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,