குறள் : 646

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்

மு.வ உரை :

பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.

கலைஞர் உரை :

மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.

சாலமன் பாப்பையா உரை :

பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை.

Kural 646

Vetpaththaanj Chollip Pirarsol Payankotal
Maatchiyin Maasatraar Kol

Explanation :

It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself.

Horoscope Today: Astrological prediction for January 29, 2022

Today rasi palan - 29.01.2022


இன்றைய பஞ்சாங்கம்

29-01-2022, தை 16, சனிக்கிழமை, துவாதசி திதி இரவு 08.38 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 02.49 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சனிப் பிரதோஷம். (வாக்கியம்) சிவ வழிபாடு நல்லது. 

இராகு காலம்

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. 

இன்றைய ராசிப்பலன் - 29.01.2022

மேஷம்

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமத பலனே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை தவிர்க்கவும்.

மிதுனம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் குறையும். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

கடகம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியுடன் முடியும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெய்தி கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ், செல்வம், செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும்.

சிம்மம்

இன்று உறவினர்கள் வழியில் மன சங்கடங்கள் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல லாபத்தை அடைய முடியும். 

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். 

துலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியான நெருக்கடிகளால் மனஅமைதி சற்று குறையலாம். பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும்.

தனுசு

இன்று குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்திருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைவதுடன் தேவைகளும் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும்.

மகரம்

இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். அசையும் அசையா சொத்து ரீதியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும்.

கும்பம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாரட்டப்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,