குறள் : 643
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
மு.வ உரை :
சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன் கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.
கலைஞர் உரை :
கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.
சாலமன் பாப்பையா உரை :
நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்).
Kural 643
Kettaarp Pinikkum Thakaiyavaaik Kelaarum
Vetpa Mozhivadhaam Sol
Explanation :
The (ministers) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).
Horoscope Today: Astrological prediction for January 26, 2022
இன்றைய பஞ்சாங்கம்
26-01-2022, தை 13, புதன்கிழமை, நவமி திதி பின்இரவு 04.34 வரை பின்பு தேய்பிறை தசமி. சுவாதி நட்சத்திரம் பகல் 10.06 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம்
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 26.01.2022 Today rasi palan - 26.01.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப செய்திகள் இல்லம் தேடி வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.
மிதுனம்
இன்று உங்களின் ஆடம்பர செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். தொழிலில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதன் மூலம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும்.
கடகம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். பெண்களுக்கு பணிச்சுமை குறையும்.
சிம்மம்
இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடையலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
கன்னி
இன்று ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. வேலையில் சக ஊழியர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும்.
விருச்சிகம்
இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும்.
தனுசு
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
மகரம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஆரோக்கிய பிரச்சினையால் மன உளைச்சல் உண்டாகலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். தேவையற்ற செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,