ராணிப்பேட்டை: பூட்டுதாக்கு பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற 21 வயது இளம்பெண்.


ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுதாக்கு காமராசர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் இளவழகன் இவருடைய மகள் தீபிகா, இவர் திமுக சார்பில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார் இந்நிலையில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தீபிகா அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை காட்டிலும் 1200 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே இளம் வயதில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரே வேட்பாளர் தீபிகா என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்றுள்ள தீபிகா இந்த வெற்றியை பயன்படுத்தி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வதாகவும் மற்றும் அவர்களின் குறைகளை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.