ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன், அரசு பஸ் கண்டக்டர். இவரது மகள் சொர்ணலதா என்ற ஸ்வேதா (வயது 20). இவர் நேற்று மாலை மேய்ச்சலில் இருந்த மாடுகளை ஓட்டி வருவதற்காக சென்றுள்ளார்.

அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் ஸ்வேதா அங்கு இருந்த ஒரு புளிய மரத்தடியில் ஒதுங்கினார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு மேல்விஷாரம் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்

இதுகுறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.