குறள் : 543
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
மு.வ உரை :
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
கலைஞர் உரை :
ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை :
அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.
Kural 543
Andhanar Noorkum Araththirkum Aadhiyaai
Nindradhu Mannavan Kol
Explanation :
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin and of all virtues therein described.
இன்றைய பஞ்சாங்கம்
18-10-2021, ஐப்பசி 01, திங்கட்கிழமை, திரியோதசி திதி மாலை 06.08 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 10.49 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் பகல் 10.49 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம்
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்லன் - 18.10.2021
மேஷம்
இன்று தொழிலில் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
ரிஷபம்
இன்று நீங்கள் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பணப்பிரச்சினை நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
கடகம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.
சிம்மம்
இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.
கன்னி
இன்று உங்களுக்கு மனஅமைதி இருக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலையில் சிலருக்கு திறமைகேற்ற பதவி உயர்வு கிட்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
இன்று உற்றார் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை வராத பழைய கடன்கள் இன்று வசூலாகும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
இன்று தொழில் வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களால் இடையூறுகள் உண்டாகும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.
மகரம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். நவீனகரமான பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளால் நல்ல லாபம் கிட்டும்.
கும்பம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் பாதியிலேயே தடைபடலாம். நெருங்கியவர்களால் மனசங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களால் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,