ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத் தில் அருள்பாலித்தார் .
ரத்தினகிரி கோயிலில் நவராத்திரி விழா 6 ம் நாள் முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது .
ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் மலை மீது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பாலமுருகன் கோயில் உள்ளது . இக்கோயிலில் மலையடிவாரத்தில் விஜய துர்க்கையம்மன் மற்றும் வராஹி அம்மன் கோயில்கள் உள்ளது . இக்கோயில்களில் இந்தாண்டுக் கான நவராத்திரி விழா கடந்த 7 ம் தேதி முதல் நடந்து வருகிறது . நவராத்தி விழாவில் 6 ம் நாளான நேற்று விஜய துர்க்கையம்மன் , வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது .
தொடர்ந்து , சிறப்பு அலங்காரத்தில் விஜய துர்க்கையம்மன் , வராஹி அம்மன் அருள்பாலித்தனர் . மேலும் , நவராத்திரி விழா முன்னிட்டு கோயிலில் கொலு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
