ராணிப்பேட்டையில் சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராணிப்பேட்டை நகரம் காரை பகுதியை சேர்ந்தவர் விக்டர் அற்புதராஜ் ( 28 ) . இவர் கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார் . இவருக்கு பிரிசித்தி மோனிகா ( 27 ) என்ற மனைவியும் , ஒன்றரை வயதில் ஒபிலியா அஜூலி என்ற பெண் குழந்தையும் உள்ளன . கொரோனா தொற்று பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வந்த விக்டர் அற்புதராஜ் வீட்டில் இருந்தபடி வேலையை தொடர்ந்துள்ளார் .
இந்நிலையில் , கடந்த சில நாட்களாக அற்புதராஜ் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டாராம் . நேற்று முன்தினம் இரவு மேல்மாடியில் உள்ள அறைக்கு தூங் கச்சென்றவர் நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை . இதனால் , அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மேல்மாடி அறைக்கு சென்று பார்த்தபோது விக்டர் அற்புதராஜ் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார் . இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ராணிப்பேட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .
அதன்பேரில் , போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
மேலும் , வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர் .