ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள ஆனைமல்லூரை சேர்ந்தவர் ஏ.வி. சரவணன்(45). இவர் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். துணைத்தலைவருக்கான வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து வார்டு உறுப்பினர்களிடம் நேற்று முன்தினம் ஆலோசனை செய்தார். இதில் பெண் உறுப்பினர் ஒருவரை துணைத்தலைவர் வேட்பாளராக தேர்வு செய்தனர்.

அப்போது அங்குவந்த அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு சரவணன்(40) என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊராட்சி மன்ற தலைவரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஏ.வி.சரவணன் திமிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.