உலக காய தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் 1,000 குடும்பங்களுக்கு சுகாதார பாதுகாப்புபெட்டகத்தை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

ஆண்டுதோறும் அக்டோபர் 17ம் தேதி உலககாயம்(உடல்) தினமாக கடைபிடிக்கப்படுகிறது.உடலை பாதுகாத்து மரணத்தை தவிர்க்ககையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணரிவு ஏற்படுத்த இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி, வாலாஜா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று உலக காய தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார் மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷாநநதினி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்து இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பங்களிப்புடன் 1,000 குடும்பங்களுக்கு சுகாதார பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில், 'உலக சுகாதார நிறுவனதத்தின் அறிக்கைப்படி சாலை விபத்துகளால் காயம் ஏற்பட்டு அதிகள்வில் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. அதனை தவிர்க்க உடனடியாகமுதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயிரை காப்பாற்ற வேண்டும். இதற்கான விழிப்புணர்வை அனை வருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

மேலும், முதல்வரின் தமிழக மக்களை தேடி மருத்துவம் மிகவும் உன்னதமான திட்டமாகும். தொடங்கிய சில நாட்களிலேயே பல லட்சம் மக்கள் பயனடைந்து உள்ளனர். குறிப்பாசு மருத்துவவசதி செல்லாத மலைவாழ் மக்கள், முதியோர், ஆதரவற்றோர்களுக்கு இது வரப்பிரசாதமாகஉள்ளது' என்றார். இதில் மாவட்ட செயலாளர் ரகுநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.