வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 ம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து . இந்த பருவமழை காலகட்டங்களில் சாலைகளில் மரங்கள் சாய்தல் , மண் சரிவுகளாலும் , வெள்ளப் பெருக்கால் சாலைகள் , பாலங்கள் சேதமடைவ தால் போக்குவரத்து தடை ஏற்படும் நிலை உருவாக வாய்ப்புள்ளது . இதை , தற்காலிகமாக சரி செய்யும் வகையில் நெடுஞ்சாலைத்துறையில் 40 கோட்டங்களில் அவசர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது .
இந்த கட்டுப்பாட்டு அறைகிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலக கட்டுபாட்டு அறையுடன் ணைக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டால் பொதுமக்கள் 044-22351099,044 2235 1066 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் . இந்த கட்டுப்பாட்டு அறை நகராட்சி , மாநகராட்சி , உள்ளாட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுடன் 24 மணி நேரம் தொடர்பு கொள்ளும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது .
பருவமழை கால கட்டத்தில் தற்காலிக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக காலை 7 மணி முதல் பிற் பகல் 2 மணி வரை , பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணிவரை , இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூன்று ஷிப்டுகளாக பொறியாளர்கள் , தொழில்நுட்ப உதவியாளர்கள் , சாலை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் .
சென்னையை பொறுத்தவரையில் சைதாப்பேட்டையில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது . இது குறித்து நெடுஞ் சாலைத்துறை அதிகாரி கூறும்போது , ' தமிழகம் முழுவதும் 62 ஆயிரம் கி.மீ நீளச்சாலைகள் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன . இந்த சாலைகளில் மழைக்காலங்களில் போக்குவரத்து தடை ஏற்படுவதை தவிர்க்க அவசர காலங்களில் பணியாற்றும் வகையில் பொறியாளர்கள் மூன்று ஷிப்டுகளாக நியமிக்கப் பட்டுள்ளனர் . மேலும் , அந்தந்த கோட்ட அலு வலகத்தில் அமைக்கப் பட்டுள்ள கட்டுபாட்டு அறை கிண்டியில் உள்ள முதன்மை இயக்குனர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன . இங்கிருந்து சம்பந் தப்பட்ட பகுதிகளில் பிரச்னை இருந்தால் பொறியாளர்களுக்கு உடனடியாக அறிவுறுத் தப்படுகிறது . டிசம்பர் 1 ம் தேதி வரை இக்கட்டுப் பாட்டு அறை செயல்படும் ' என்றார் .