குறள் : 473
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

மு.வ உரை :
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

கலைஞர் உரை :
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

சாலமன் பாப்பையா உரை :
தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.

Kural 473
Utaiththam Valiyariyaar Ookkaththin Ookki
Itaikkan Murindhaar Palar

Explanation :
There are many who ignorant of their (want of) power (to meet it) have haughtily set out to war and broken down in the midst of it.




இன்றைய பஞ்சாங்கம்
11-08-2021, ஆடி 26, புதன்கிழமை, திரிதியை திதி மாலை 04.54 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பூரம் நட்சத்திரம் காலை 09.31 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. ஸ்வர்ண கௌரி விரதம். 

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் - 11.08.2021

மேஷம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, அசதி இருந்தாலும் எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். அசையா சொத்துக்களால் சிறு விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம்.

ரிஷபம்
இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். தெய்வ வழிபாடு நல்லது.

மிதுனம்
இன்று உங்களுக்கு விடியற்காலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பொன் பொருள் சேரும்.

கடகம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வேலையில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.

கன்னி
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று மந்த நிலை ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

துலாம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்
இன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருட்கள் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வருமானம் இரட்டிப்பாகும்.

தனுசு
இன்று நீங்கள் மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பொறுமையுடன் இருப்பது நல்லது.

மகரம்
இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 03.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபரிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். மதியத்திற்கு பின் மனஅமைதி உண்டாகும்.

கும்பம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 03.23 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

மீனம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். மன நிம்மதி ஏற்படும்.