ராணிப்பேட்டை நவல்பூரில் ஸ்கடர் நினைவு மருத்துவமனை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை நவல்பூரில் ஸ்கடர் நினைவு மருத்துவமனை சார்பில் கொரொனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒருவாரகால கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும், என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி, ராணிப்பேட்டை நவல்பூரில் ஸ்கடர் மருத்துவமனை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மருத்துவர், செவிலியர் குழுவினர் மற்றும் மிமிக்ரி கலைஞர் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு கொரொனா தொற்று பரவல் மற்றும் அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

மேலும், கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு ஆலோச னைகளை வழங்கினர்.