குறள் : 448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
மு.வ உரை :
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
கலைஞர் உரை :
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
சாலமன் பாப்பையா உரை :
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.
Kural 448
Itippaarai Illaadha Emaraa Mannan
Ketuppaa Rilaanung Ketum
Explanation :
The king who is without the guard of men who can rebuke him will perish even though there be no one to destroy him.
இன்றைய பஞ்சாங்கம்
18-07-2021, ஆடி 02, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி இரவு 12.29 வரை பின்பு வளர்பிறை தசமி. சுவாதி நட்சத்திரம் இரவு 12.08 வரை பின்பு விசாகம். சித்தயோகம் இரவு 12.08 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். கரி நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 18.07.2021
மேஷம்
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிட்டும்.
ரிஷபம்
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
கடகம்
இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிட்டும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
கன்னி
இன்று எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் சற்று குறையும்.
துலாம்
இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறும்.
விருச்சிகம்
இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை, கை கால் அசதி உண்டாகும். புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சகோதர சகோதரிகள் வழியில் சாதகமான பலன் கிட்டும். சிலருக்கு ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும்.
கும்பம்
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.
மீனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,