ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் செல்வ பாலாஜி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொரோனா நோய் தடுப்பு மற்றும் இறப்பு சதவீதம் பணியில் ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை நடத்தியுள்ளது. ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ராட்சத வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பல்வேறு இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து சிறப்பான முறையில் பல்லாயிரக்கணக்கில் தடுப்பூசிகளை போட்டது. முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால் 6 பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முற்றிலும் கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.