ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் ஹவுசிங் போர்டை சார்ந்த கல்லூரி மாணவி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று காலை வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்று வருவதாகக் கூறி சென்றவர், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் தேடி பார்த்துக் கிடைக்காததால் மாணவியின் தந்தை அரக்கோணம் டவுன் போலீஸில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.