ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பதிவான மழை அளவு விவரம் ( மில்லி மீட்டா்):
![]() |
ராணிபேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக வாலாஜா தாலுகாவில் 87.8 மி.மீ மழை: பதிவானது.
தமிழகத்தின் மழையால் மாவடங்களில் கடந்த, சில நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு, இடங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து, குளிர் காற்று வீசியது. இந்நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார். 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் வெள்ள நீரானது சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
இடி மின்னல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்நிறுத்தம் செய்யப்பட்டதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. கடந்த சில. நாட்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இரவு நேரங்களில் அவ்வப்போது, பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல், அரக்கோணம், காவேரிப்பாக்கம், சோளிங்கர், ஆற்காடு, கலவை உள்ளிட்ட இடங்களி லும் பரவலாக மழை பொழிந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவில் அதிகபட்சமாக 87.8 மி.மீட்டர் மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத். தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம்(மி.மீட்டரில்):
அரக்கோணம்- 10.4, ஆற்காடு- 56, காவேரிப்பாக்கம்- 32, சோளிங்கர்- 48, அம்மூர்- 36, கலவை- 8.2. மொத்த மழை அளவு;:278.4 மி.மீட்டர். சராசரி மழை அளவு-39.ரமி.மீட்டர்.