ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே சென்னை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்த ஜெயவேல் என்பவர் தனது உறவினர் சாவுக்கு காரில் திருவண்ணாமலை சென்று திரும்பிய போது சுமைதாங்கி அருகே சாலையின் சென்டர் மீடியாவில் மோதி கார் தலைகீழாக கவிழ்ந்தது விட்டது உள்ளிருந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர்.
பின் அவர் சென்னை - பெங்களூர் ரோடு சுமைதாங்கி எதிர் சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பின்னர் பிரேதம் வாலாஜா அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது காவேரிப்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
