ராணிப்பேட்டை அடுத்த தெங்கால் கிராம பொன்னை ஆற்று பாசன கால்வாய் தூர்வாரும் பணியை துவக்கி வைத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி.

 
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் தெங்கால் கிராமம் பொன்னை ஆற்றுப் பாசன கால்வாய் தூர்வாரும் பணியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி துவக்கிவைத்து பேசியதாவது. தெங்கால் கிராம பாசன கால்வாயை மக்களே தங்கள் சொந்த செலவில் தூர்வார முயற்சி செய்தனர் அதற்கு வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தெங்கால் கிராம ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சி. பத்மநாபன் தலைமையில் கிராம மக்கள் என்னிடம் நேரில் வந்து தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை மேற்கண்ட கிராம பாசன கால்வாயை தூர்வார வேண்டும் என அறிவுறுத்தினேன் அதன்பேரில் உடனடியாக தூர்வாரும் பணியை துவக்கியுள்ளனர். அதேபோல் பாலாறு மற்றும் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தேன் இந்நிலையில் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அமைச்சரிடம் எடுத்துக்கூறி வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே பாலாறு மற்றும் பெண்ணையாற்றின் குறுக்கே 15 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் திட்டம் அறிவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் இந்த ஆட்சியில் விவசாயத்துக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பாலாறு வடிநில செயற்பொறியாளர் ரமேஷ் ராணிப்பேட்டை உப கோட்ட பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் திமுக வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் சேஷா வெங்கட் , தெங்கால் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பத்மநாபன் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வடகால் என் பாரதி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.