குறள் : 427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
மு.வ உரை :
அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார் அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
கலைஞர் உரை :
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை :
அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
Kural 427
Arivutaiyaar Aava Tharivaar Arivilaar
Aqdhari Kallaa Thavar
Explanation :
The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.
இன்றைய பஞ்சாங்கம்
27-06-2021, ஆனி 13, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி பகல் 03.54 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 01.21 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பின்இரவு 01.21 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹர சதுர்த்தி. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 27.06.2021
மேஷம்
இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களின் உதவி உரிய நேரத்தில் கிடைக்கும்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.
கடகம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.
கன்னி
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் தனவரவு உண்டாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.
விருச்சிகம்
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பெற்றோருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் குறையும்.
மகரம்
இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
கும்பம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
மீனம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,