குறள் : 408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
மு.வ உரை :
கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.
கலைஞர் உரை :
முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை :
படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.
Kural 408
Nallaarkan Patta Varumaiyin Innaadhe
Kallaarkan Patta Thiru
Explanation :
Wealth gained by the unlearned will give more sorrow than the poverty which may come upon the learned.
இன்றைய பஞ்சாங்கம்
08-06-2021, வைகாசி 25, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பகல் 11.24 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. நாள் முழுவதும் கிருத்திகை நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. கிருத்திகை. மாத சிவராத்திரி. சிவ-முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 08.06.2021
மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.
மிதுனம்
இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் அடைவீர்கள்.
கடகம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எதிர்பாராத தன வரவால் மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கன்னி
இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். மனக்குழப்பம் அலைச்சல் சோர்வு ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 12.24 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மதியத்திற்கு பின் மனஅமைதி இருக்கும்.
துலாம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.24 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் செலவுகள் குறைந்து காணப்படும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிட்டும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினை தீரும்.
மகரம்
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிட்டும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
மீனம்
இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். வீண் செலவுகளால் பணப்பிரச்சினை ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,