குறள் : 404
கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்.

மு.வ உரை :
கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

கலைஞர் உரை :
கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை :
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

Kural 404
Kallaadhaan Otpam Kazhiyanan Raayinum
Kollaar Arivutai Yaar

Explanation :
Although the natural knowledge of an unlearned man may be very good the wise will not accept for true knowledge



இன்றைய பஞ்சாங்கம்
04-06-2021, வைகாசி 21, வெள்ளிக்கிழமை, தசமி திதி பின்இரவு 04.08 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 08.47 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 09.51 மணி முதல் 10.27 மணி வரை. 
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

சந்தி சூரிய ராகு புதன்(வ) சுக்கி
குரு திருக்கணித கிரக நிலை 
04.06.2021 செவ்
சனி (வ) 
 கேது 

இன்றைய ராசிப்பலன் - 04.06.2021

மேஷம்
இன்று குடும்பத்தில் வரவிற்கேற்ப செலவுகள் இருக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் நிம்மதியை தரும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும்.

மிதுனம்
இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். குடும்பத்தில் திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

கடகம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக கூட்டாளிகளுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பாராத உதவியால் தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

கன்னி
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் கடினமான காரியங்களை கூட எளிதில் முடித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன் கிடைக்கும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு மந்த நிலை இருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது.

தனுசு
இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபார ரீதியான செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.

மகரம்
இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் முலம் சுபசெய்திகள் கிடைக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிட்டும்.

கும்பம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கடன்கள் சற்று குறையும். எதிலும் நிதானம் தேவை.

மீனம்
இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,