ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோதண்டன்(31). இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்கள். கோதண்டன் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுள்ளார். அதன்படி நேற்று காலை வீட்டிற்கு நீண்ட நேரமாகியும் வராததால் பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை வடமாம்பாக்கத்தில் உள்ள தன்ராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோதண்டன் தலையில் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று இறந்த கோதண்டனின் சடலத்தை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றார்கள்.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். கொலையான கோதண்டன் கடந்த 2014 ல் அதே பகுதியை சார்ந்த முனுசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்பதால் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டரா அல்லது வேறு நபர்கள் கொலை செய்தார்களா என்கிற கோணத்தில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றார்கள்.
அரக்கோணம் மற்றும் அருகே உள்ள பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு கொலைகள் நடந்த நிலையில் இது மூன்றாவது கொலையாக நடந்திருப்பதால் அரக்கோணம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.