வேலூர் மாவட்டம், பிள்ளையார் குப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வினோத்குமார். டிரைவர். இவரது மகள் வினோதினி (29). இவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போட்டுவிட்டு மாலை 5 மணியளவில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுபற்றி குடும்பத்தார் சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

 
அதன்பேரில் போலீசார் வினோதினியை தேடிவந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள அரப்பாக்கத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் நேற்று மாலை சடலமாக இருந்துள்ளார்.

இதுபற்றி தகவலறிந்த ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோதினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வினோதினியின் இறப்பு பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.