தமிழகத்தில் ஜூன் 8 முதல் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்புத்துறை சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், "ஜூன் 8 முதல் நியாய விலைக்கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணிவரையும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரையும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.