ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை சண்முகா தியேட்டர் அருகே மாந்தாங்கள் பகுதியிலிருந்து சென்னைக்கு தோல் ஏற்றிச்சென்ற லாரி நிலைதடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதியதில் முன்னால் சென்று கொண்டிருந்த இரு இருசக்கர வாகனங்கள் லாரியில் சிக்கி சுக்குநூறாகின இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மாந்தாங்கல் பகுதியை சேர்ந்த கந்தன் 28 முத்துக்கடை பகுதியை சேர்ந்த லோகநாதன் 68 ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆகியோர் சிறு காயங்களுடன் அதிஸ்டவசமாக உயிர்தப்பினர்.
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் கவனக்குறைவாக லாரியை ஓட்டி வந்த டிரைவர் கதிர்வேல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓட்டம் இதனையடுத்து முத்துக்கடை அம்மூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ராணிப்பேட்டை உதவி ஆய்வாளர்கள் இருசப்பன் , சுரேஷ் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் மேலும் அவ்வழியாக வந்த ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.