கொரோனா தடுப்பு பணி குறித்து அனைத்துக்கட்சி எம்.எல்.ஏக்கள் குழுவுடன் வரும் 22-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த 10-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு 24-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
இதற்கிடையே அடுத்த ஊரடங்கு மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாகவும் அப்போது கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏக்கள் குழுவினர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்கப்படுவது குறித்து விவாதிக்கபடும் என்று தெரிகிறது.