குறள் : 399
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

மு.வ உரை :
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

கலைஞர் உரை :
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.

சாலமன் பாப்பையா உரை :
தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.

Kural 399
Thaamin Puruvadhu Ulakin Purak Kantu
Kaamuruvar Katrarin Thaar

Explanation :
The learned will long (for more learning) when they see that while it gives pleasure to themselves the world also derives pleasure from it



இன்றைய பஞ்சாங்கம்
30-05-2021, வைகாசி 16, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 02.13 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 04.41 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 
இன்றைய ராசிப்பலன் - 30.05.2021

மேஷம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

ரிஷபம்
இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் பெண்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.

மிதுனம்
இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை அமைதியாக இருப்பது நல்லது. சுபகாரிய நிகழ்ச்சிகள் மற்றும் தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கடகம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

சிம்மம்
இன்று பொருளாதார நெருக்கடிகள் குறைந்து குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் நீங்கும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கி அனுகூலமான பலன் கிடைக்கும்.

கன்னி
இன்று உங்களுக்கு எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பணப் பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமாக செயல்படுவது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

துலாம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை உண்டாகும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். 

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். 

தனுசு
இன்று பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். பணப்பிரச்சினைகளை சமாளிக்க செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

மகரம்
இன்று நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கும்பம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் முன்னேற்றத்தை காணலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனம்
இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,