ராணிப்பேட்டையில் தமிழக முதலமைச்சர் அறிவித்த அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர் பொது விநியோகம் திட்டம் அருட்பெருஞ்ஜோதி வரவேற்றார். இவ்விழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர். காந்தி கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கினார். மேலும் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன் ஆற்காடு. சட்டமன்ற உறுப்பினர் ஜே. எல். ஈஸ்வரப்பன் ஆகியோர் பங்கேற்றனர் முடிவில் மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை நன்றி கூறினார்.