ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையிலான போலீசார், நேற்று ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே உள்ள அகரம்சேரி காலாபுதூர் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர் ராணிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 8 மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. 

இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.