ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி அரசு வழிகாட்டிய நெறிமுறைகளை கடைபிடிக்காமல் காவேரிப்பாக்கம் காவலர் குடியிருப்பு எதிரே உள்ள மாட்டு இறைச்சி வியாபாரம் செய்யும் இரண்டு கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், இறைச்சி வாங்க வந்திருந்த வாடிக்கையாளர்கள் அத்தனை பேரிடமும் அபராத தொகையை உதவி ஆய்வாளர் சீதா விதித்தனர்.

அதனைத்தொடர்ந்து மீன் கடைக்கு சென்று அங்கேயும் அபராதம் விதித்து அங்கு முகவசம் அணியாமல் வந்திருந்த அத்தனை பேரையும் ஓடி, ஓடி மடக்கி, மடக்கி, பிடித்து அபராதத் தொகை விதித்து எச்சரித்து அனுப்பினார்.