ஆற்காடு அருகே மாவட்ட எல்லையில் அமைக்கப் பட்டுள்ள சோதனைச்சாவடி பகுதி வழியாக வரும் பொதுமக்களுக்கு இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று கபசுர குடிநீர் வழங்கினர். 

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கவும், குணப்படுத்தவும் கபசுர குடிநீர் பயன்படுத்த சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் காவல்துறை சார்பில் மாவட்ட எல்லையான அரப்பாக்கம் அருகே உள்ள சோதனைச் சாவடி பகுதி வழியாக வரும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று கபசுர குடிநீரை வழங்கினர். 

மேலும் கொரோனா பரவலை தடுக்க விதிமுறைகளை கடைபிடித்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் கே.சரவணன், ரத்தினகிரி சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.