வேலூர் காட்பாடியில் சேர்ந்தவர்கள் சிவராஜ் பாமா தம்பதியர். சிவராஜ் காட்பாடியில் உள்ள எலைட் டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
கணவன் மனைவி இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி சிவராஜ் உயிரிழந்துள்ளார்.
மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கணவன் மனைவி இருவரும் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் காட்பாடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.