ராணிப்பேட்டை: வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை வழங்கினாா்.
ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் ரெகுலேட்டா் - 20, ஆக்சிஜன் மாஸ்க் -100 ஆகிய மருத்துவ உபகரணங்களை ழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனை மருத்துவா்கள் உஷாநந்தினி, கீா்த்தி ஆகியோரிடம் உபகரணங்களை வழங்கினாா்.
இதில் ராணிப்பேட்டை ரோட்டரி சங்க தலைவா் எம்.சிவலிங்கம், ரோட்டரி சங்க நிா்வாகிகள் நிா்மல் ராகவன், கமல ராகவன், ஜி.கே.உலகப்பள்ளி இயக்குநா்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, மாவட்ட வா்த்தகரணி துணை அமைப்பாளா் கே.ஜி.முரளி பிரகத் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.