சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் கண்ணன் தீர்த்தவாரி 
முக்கோட்டி துவாதசி முன்னிட்டு சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் கண்ணன் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது . 

பின்னர் கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு தக்கான் குளத்திற்கு சென்றடைந்தார் அங்கு சிறப்பு பூஜைகளுடன் கண்ணன் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.